KOLNews

மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2

இன்றைய நவீன மருத்துவம் மரபு வைத்தியத்திலிருந்து கிளைத்தெழுந்த பிரிவே. கீழே இருக்கும் logoவை மருத்துவம் சார்ந்த அனைத்து அமைப்புகளிலும் காணலாம். கிரேக்க புராண நம்பிக்கைகளின் படி 'God of healer Asclepius' நினைவாக உருவாக்கப் பட்ட குறியீடு இது. பாம்பு ஒரு புதுப்பித்தல் மற்றும் மறுபிறவியின் குறியீடு. அதன் விஷம் கூட மருத்துவ குணம் கொண்டது. 

What is Celiac Disease? | Celiac Disease Foundation | Medicine logo, Medical  symbols, Health symbol

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவக் கண்டுபிடிப்பான பெனிசிலின் பூஞ்சைக் காளானிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டதுதான். இது போல நவீன மருத்துவ அறிவியலின் தொடக்கம் மரபிலிருந்தே உலகெங்கும் கிளை விட்டு பரவியுள்ளது. ஆனால் இன்று உலகெங்கும் மனிதகுலத்தின் மாபெரும் நோய் தீர்க்கும் அறிவியலாக வளர்ந்து நிற்பதற்கான காரணம் அது தன்னைத்தானே சோதித்து வளர்ந்தது மட்டுமல்லாமல் பெரும்பகுதி மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க தொழில்நுட்பத்தையும் சேரந்தே வளர்த்துக் கொண்டது. பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டு சற்றேரக்குறைய முப்பதாண்டுகள் கழித்தே மக்களின் பரவலான பயன் பாட்டுக்கு வந்தது. 

Disadvantages of Traditional Medicine: Is Traditional Medicine Failing Us?

மரபு மருத்துவத்தின் மிகப்பெரும் பிரச்சினையே அது காலத்திற்கு தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளாததுதான். தவிரவும் இந்த மருத்துவத்தின் treatment algorithm மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடும். இது நவீன மருத்திலும் உண்டு எனினும் மரபு வைத்தியத்தில் வட, தென் துருவ அளவிற்கு வித்தியாசங்கள் உண்டு. நவீன மருத்துவம் எப்பொழுதும் தனது வரையறைக்குள் வராத நோய்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை அதில் தலையிடாது. அதற்கு சிறந்த உதாரணம் முந்தைய பதிவில் நான் கூறிய எனது அனுபவமே. 

மரபு மருத்துவம் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்தி ஆவணப் படுத்தி கொள்ள இன்று வரை விரும்புவதாகத் தெரியவில்லை. எல்லாமே செவி வழியாக சந்ததியினருக்கு கடத்தப் படுகிறது. யோசித்துப் பாருங்கள் இதில் எவ்வளவு விடுபடுதல்கள் இருக்க வாய்ப்புள்ளது. அடுத்து அது பெரும்பான்மை சமூகத்திற்கு எளிய வழியில் கிடைக்கும் தொழில் நுட்பங்களையும் வளர்த்துக் கொள்ளவில்லை. மூன்றாவதாக அதன் ஆராய்ச்சி தன்மைகளை பல்வேறு நோய்க் கூறுகளுக்கு விரிவு படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. 

எல்லா நோய்களுக்கும் மரபு வைத்தியத்தில் தீர்வு உண்டு என்று நம்பும் myth லிருந்து அவர்கள் வெளி வர வேண்டும். 

இன்று உலகெங்கும் இருபெரும் சவாலான நோய்கள் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இதன் உப விளைவுகளில் இருந்தே பல்வேறு உடல் உபாதை சார்ந்த நோய்கள் உரவாகுகின்றன. இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டு பிடிக்க மரபு வைத்தியர்கள் முயல வேண்டும். இவை இரண்டுமே நமது வாழ்வியல் மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கம், உண்ணும் உணவில் ஏற்பட்டுள்ள தரவிலக்கம், பணிச்சூழல் தரும் அழுத்தம் போன்ற பல காரணிகளால் ஏற்படுகிறது. மரபு வைத்தியத்தின் அடிப்படையே உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் நினைவில் கொண்டால் நான் இங்கு சொல்ல வருவது என்ன என்று நன்கு புரியும். 

மேற்குறித்த நோய்கள் அல்லாமல் கிட்னி ஸ்டோன், காமாலை, குடலிறக்கம், மூலம், சைனஸ், பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த சில பிரச்சினைகள் என்று சில நோய்களுக்கும் மரபு வைத்தியத்தில் நிவாரணம் உண்டு. ஆனால் அவை முறையாக ஆராயப்பட்டு அதிலிருக்கும் குறைகள் களையப் பட்டு பெரும் மக்கள்திரளுக்கும் எளிதாக கிடைக்கும் படி தொழில்நுட்ப உதவியுடன் தயாரித்து சந்தைப் படுத்தப்பட வேண்டும். 

Naturopathy Services Health Medicine Herbalism Pharmacy - Herbal Medicine  Logo Png, Transparent Png - kindpng

தற்பொழுது திருவல்லிக்கேணியில் காமாலைக்கு யுனானி மரபு வைத்தியம் செய்யும் பாரம்பரிய குடும்பங்களின் இளம் தலைமுறை முறையான நவீன மருத்துவம் படித்து இரண்டையும் கலந்து சிறப்பாக மருத்துவம் செய்வதாக கேள்விப் படுகிறேன். இது போலவே புத்தூரில் எலும்பு முறிவிற்கும் நவீன, மரபு வைத்தியம் சிலர் செய்வதாக அறிகிறேன். இவைக் குடும்பங்களுக்குள் பாதுகாக்கும் ரகசியமாக இல்லாமல் எல்லோருக்குமானதாக முறைப்படி கொண்டு வருவது சமூகத்திற்கு பலனளிப்பதாக இருக்கும். 

நவீன மருத்துவம் இன்று அடைந்திருக்கும் உச்சம், அதன் ஜெட் வேக பாய்ச்சல் அதனால் ஏற்படும் பலாபலன் மற்றும் பாதகங்கள் பற்றி இறுதிப் பதிவில் பேசுவோம்.

------------------------------------------------------------------------

கட்டுரையாளர் பார்த்திபன் இரத்தினவேலு

English Summary

Traditional medicine vs modern medicine. - Section. 2

Latest Articles

KOLNews