KOLNews

கொளுத்தி போடும் மிஷ்கின்..! - கோலிவுட்டின் புதிய பார்முலா..!

விற்பனை துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் கூட , ஒரு பொருளை விற்க எந்த மாதிரி யுக்தியை கடைபிடிப்பது என்பதில் கொஞ்சம் யோசனை செய்வது உண்டு.  ஆனால் தமிழ் சினிமாக்கார்கள் தற்போது கடைபிடிக்கும் ஒரே யுக்தி...யாராவது நாலு பேர் நம்ம நல்லா திட்டனும், சமூக வலைத்தளங்களில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வாதம் செய்யணும் ..அதற்கு தேவையானதை செய்தால் படம் வெற்றி..! என முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது .

ஒன்று படத்தை அந்த வகையில் எடுக்க வேண்டும், சர்ச்சைக்குரிய வசனம் வேண்டும், இல்லாவிட்டால் படம் சம்பத்தப்பட்டவர்கள் பொதுமேடைகளில் எதையாவது பேசி சர்ச்சையை உருவாக்க வேண்டும்...

இது தான் தற்போது கோலிவூட்டின் வெற்றி 'பார்ர்முலா' வாக மாறிவிட்டதோ என தோன்றுகிறது.

அந்த வகையில்  ‛‛இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை'' என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளார்.

அதையடுத்து, அவரின் 'சைக்கோ' படத்திற்கு வந்த விமர்சனங்களை சமாளிப்பதற்காக மிஷ்கின் இப்படி சம்மந்தம் இல்லாமல் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக இந்து தெய்வங்கள் குறித்து பேசினால், பிரச்னையை முன்னெடுக்க பாஜக, மற்றும் பிற இந்துத்துவ இயக்கங்கள் தயாராய் இருப்பது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது.

மிஷ்கினும் இந்து கடவுள் 'ராமன்' சம்பத்தப்பட்ட ராமாயணத்தையே கையில் எடுத்துள்ளார்.

Image result for mysskin psycho

அண்மையில் தான் மிஷ்கின் இயக்கிய ‛சைக்கோ படம் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இறுதியில் அவனை மன்னிப்பது போல் படம் முடியும். இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. இதில் என்ன லாஜிக் உள்ளது என சிலர் விமர்சிக்க, அதற்கு பதில் அளிப்பதோடு படத்திற்கான 'ப்ரமோ'வையும்  செய்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க, வேறொரு திரைப்பட நிகழ்வை பயன்படுத்தி கொண்டாரோ என நினைக்க வைக்கிறது.

நடிகர் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், "60 பேட்டிகளை முடித்துவிட்டு நேற்று தான் பேசாமல் இருந்தேன். 4 கேள்வி தான், அதை 4 ஆயிரம் முறை மாற்றி மாற்றி சொன்னேன். சமூகத்தில் நடக்கும் லாஜிக் பிரச்னைகள். இதில் மிரண்டு போய் உள்ளேன். ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான். தன் பக்கமும் நியாயம் இருப்பதாக எண்ணி ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன், ராமன் கூட இணைகிறான்.

Image result for ram and ravana and vibhishana

தனக்கு சாப்பாடு போட்டு உடலை வளர்த்த அண்ணன் ராவணன் கூட இருப்பேன் என்கிறான் கும்பகர்ணன். ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான். இவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை", என பேசியுள்ளார்.

இதில் லாஜிக் இல்லை என சொல்லியதை தவிர, எந்த கதாபாத்திரத்தையும் சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசவில்லை. ஆகவே மக்கள் இதை, ஒரு காப்பியத்தின் மீதான பல விமர்சனங்களில் இதுவும் ஒன்று என கடந்து போக வேண்டியது தான்.

இதை, இந்துத்துவா இயக்கங்களும் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நிராகரித்து தங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாவிட்டால், அவை தமிழ் திரையுலகின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக (PRO) மாறும் சூழல் தான் உருவாகும்.

English Summary

Triggering Mysskin ..! - Kollywood's new formula ..!

Latest Articles

KOLNews