KOLNews

பலம் தரும் கிழங்கு..!

ஒரு காலத்தில் 40 வயதை கடந்தவர்கள் மட்டும் கிழங்கு வகைகளை உணவில் எடுத்து கொள்ள யோசிப்பார்கள். காரணம் வாய்வு தொல்லையால் அவதிப்பட நேரிடும் என்கிற பயம். 

உண்மையில் கிழங்குகளினால் பல நல்ல பலன்கள் உள்ளன. உடல் உழைப்பு அதிகம் செய்யும் மனிதர்களுக்கு கிழங்குகளினால் வாய்வு தொல்லையும் இருக்காது. உட்கார்ந்து வேலை செய்வோர் மட்டுமே அது குறித்து யோசிக்க வேண்டும். மற்றபடி கிழங்குகள் நல்ல பயன்களை உடலுக்கு தருபவையே..

சேனைக்கிழங்கு..

Image result for kilangu images

பித்தம் கட்டுப்படுத்தும். வயிற்றுக் கோளாறு, எலும்பு பலவீனம் இவற்றை சரி படுத்தும். ஆஸ்துமா உடல் பலவீனம் குணமாகும். 

உருளைக்கிழங்கு.. 

Image result for kilangu images

ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் வெகுவாக பயிரிடப்படும் உருளைக்கிழங்கு சத்துள்ள உணவாகும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வந்தால் சிறு வயது குழந்தைகளின் வளர்ச்சி சிறப்படையும்.  எலும்பும் தோலுமாய் உள்ள குழந்தைகளுக்கு உருளை ஊட்டச் சத்துள்ள உணவாகும்.. 

 குழந்தை பெற்ற தாய்க்கு கொடுக்க தாய்ப்பால் பெருகும். சிறுநீர் பிரியும்.  நரம்புத் தளர்ச்சியால் தூக்கம் இல்லாவிட்டால், இதன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகலாம்.

ஆனால் நீரழிவு ரத்த அழுத்தம் வாய்வு கோளாறு ஊளைச்சதை ஆகிய கோளாறு உள்ளவர்கள் உருளை கிழங்கை நீக்கவேண்டும். 

 கருணைக்கிழங்கு... 

Image result for kilangu images

 ரத்த மூல நோய் குணமாகும். உடல் பருமன் ஏற்படும். கண் ஒளி பெருகும். தேகம் பலமடை நம் உணவில் 150 கிராம் தினசரி காய்கறிகளும் 100 கிராம் கீரையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவற்றில் கிடைக்கும் கால்சியம், இரும்பு, வைட்டமின் தாது உப்புக்கள் உடல் வளர்ச்சிக்கும் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

பனங்கிழங்கு.. 

Image result for kilangu images

உடல் வெப்பம் தணியும் மேகநோய் நீங்கும். வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், புரோட்டின், மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த ஏழைகளின் சத்துள்ள உணவாகும்.

English Summary

Tuber strong ..!

Latest Articles

KOLNews