KOLNews

உடல் நலம் காக்கும் 'துவரம்' பருப்பு..!

பொதுவாக தமிழ்நாட்டின் சமையலில் சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் அதற்கு பயன்படும் துவரம் பருப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே.!.  "பருப்பில்லாமல் கல்யாணமா..!" என்கிற சொல்லாடலுக்கு காரணமே துவரம் பருப்பு தான். 

சுவையை தவிரவும் இதில் ஏராளமான பயன்கள் உண்டு . அவற்றை பார்ப்போம்.   

காய்ச்சல் தீர்க்கும் மருந்து -  துவரம் பருப்பு ( 50 கிராம் ) , அரிசி ( 200 கிராம் ) , பூண்டு ( 3 பல் ) , மிளகு ( 20 ) , சீரகம் ( 20 ) , மஞ்சள் ( 4 சிட்டிகை ) - ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் உடனே குணமாகும் .

Thoughts on the Perfect Physique ⋆ Bob Gardner Fitness & Nutrition

உடல் பருமன் அடைய  -  மெலிந்த தேகம் கொண்டவர்கள், 100 கிராம் துவரம் பருப்புடன் , முட்டைக்கோஸை அரிந்து போட்டு வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும் . குடல் புண்ணும் குணமாகும் .

அதே போல,  100 கிராம்  துவரை இலையை வேகவைத்து அந்தத் தண்ணீரை, வலி உள்ள இடத்தில் ஊற்றிக் கழுவினால் வலி , வீக்கம் போன்றவை குணமாகும் . 

மேலும், 100 கிராம் துவரை இலை , உளுந்து - இரண்டையும் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து அரைத்துப் பற்றுப்போட்டால் உடைந்த எலும்புகள் விரைவில் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

'Tuvaram' lentils to protect health ..!

Latest Articles

KOLNews