KOLNews

விஜயகாந்த் உடல்நலம்..! - விரைவில் வீடு திரும்புவார்

தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தெரிவதாக உணரப்பட்ட  நிலையில் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த 22-ம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட சோதனையிலேயே  கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் விஜய்காந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  விஜயகாந்தின் உடல்நலம் குறித்து நடிகர்கள்  ரஜினிகாந்த், சரத்குமார், .சத்யராஜ் போன்றவர்கள் அக்கறையுடன் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

 

English Summary

Vijaykanth Health ..! - Will be back home soon

Latest Articles

KOLNews