KOLNews

குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு..! - மரக்காணத்தில் பக்தி பரவசம்..!

மழை காலத்திற்கு முன்பே நீர் நிலைகளை தூர் வாரும் பணிகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன, அத்துடன்,  கிராமங்களில் உள்ள குளங்களின் குடிமராமத்துப் பணிகளும் நடந்து வருகின்றன. 

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் உள்ள கரிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எட்டியான் குளத்தில் கடந்த சில மூன்று நாட்களாக குடிமராமத்துப் பணி நடந்து வருகிறது. 

பனியின் போது,  பொக்லையன் ஓட்டுனர் குளத்தின் மையப் பகுதியில் மணல் எடுக்க முயல்கையில்,  அங்கு 4 அடி உயரம் உள்ள கல்லாள் ஆன மகா விஷ்ணு சிலை இருந்தது தெரியவந்துள்ளது.

பொக்லைன் ஓட்டுனர் மூலம் தகவலறிந்து வந்த அப்பகுதி பொது மக்கள் வந்து பார்வையிட்டதுடன், . குளத்தில் மகா விஷ்ணு சிலை இருக்கும் தகவல் சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீயாக பரவியது.

இந்நிலையில், பொது மக்கள் குளத்தில் சிதலம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிலையை அங்கிருக்கும் கோயில் வளாகத்தில் எடுத்து வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே தகவலறிந்து வந்த  மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் மகாவிஷ்ணு சிலையை பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களிடம் விசாரனை நடத்தினார்.

கண்டெடுக்கப்பட்ட மகா விஷ்ணு சிலை சுமார் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமை வாய்ததாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

English Summary

Vishnu emerges while digging ponds! - Devotion in the Marakkanam

Latest Articles

KOLNews