KOLNews

உங்கள் முகம் வசீகரமாக இருக்க வேண்டுமா..? - இதோ சில டிப்ஸ்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த முகம் எப்போதும் பளபளப்பாக வசீகரமாக இருக்க என்ன செய்ய வேண்டும் .? கீழ்கண்ட எளிய வழிகளை பின்பற்றினாலே போதுமானது.

புதினாவை தயிரில் அரைத்து தொடர்ந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளிச்சென மாறும் . 

அதே போல, முட்டையின் வெள்ளைக்கரு , வெள்ளை வெங்காயம் , மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால் முக வசீகரம் அதிகரிக்கும் .

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க, தக்காளியை நறுக்கி முகத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் போதும்.

அதே போல . வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி கண்களுக்கு கீழே வைத்தால் கருவளையம் நீங்கும் . கோடை காலத்தில் மோரை துணியால் முக்கி முகத்தில் தேயுங்கள் . தோலின் மினுமினுப்பு அதிகரிக்கும்.

இவை தவிர. பாலில் எலுமிச்சை பழச்சாறை கலந்து முகத்தை அலம்புவதும்  . ஆப்பிளை கூழ்போல் ஆக்கி முகத்தில் பூசுவதும் கூட முகத்தை பொலிவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  . 

English Summary

Want your face to be glamorous ..? - Here are some tips ..

Latest Articles

KOLNews