KOLNews

சென்னையின் தண்ணீர் பஞ்சமும் ..ரியல் எஸ்டேட் தொழிலும் ..!

'ரம்பையின் காதல்' என்ற பழைய தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்

சுடுகாட்டில் இருந்து பாடப்படும் இந்த பாட்டு, ஏழை, பணக்காரன், ஜாதி மத பேதமின்றி அனைவரும் அங்கு தகனம் செய்யப்படும், புதைக்கப்படும் இடமாக அது இருப்பதால் சுடுகாட்டை பற்றி அப்படி பாடப்பட்டிருக்கும் அந்த பாடல்.

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே 

இறப்புக்கு பின் செல்லும் இடம் சுடுகாடு,

Image result for water scarcity in chennaiஆனால் நாம் வாழும் போதே நம் அன்றாட வாழ்வில் காணும் சமரசம் உலாவும் இடத்தை தற்போது பார்க்கமுடிகிறது. அது தண்ணீர் லாரி வந்து நிற்கும் இடம் தான். IT யில் வேலை செய்பவனும், கூரியர் கம்பெனியில் வேலை செய்பவரும், பேப்பர் போடும் பையனும், ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்மணியும் , ஜாதி மத வயது பாலின பேதமின்றி குடத்துடன் ஓடி வந்து வரிசையிலும், வரிசையில் இல்லாமலும் நிற்கும் இடமாக தண்ணீர் வண்டி நிற்கும் இடம் உள்ளது.

இத்தனை கொடுமையிலும் இது போன்ற இடங்களில், அதாவது வாழ்வாதாரமான தண்ணீர் பெறுவதற்கே வழியில்லாத பகுதியில் கொஞ்சம் மனையின் விலையை கேட்டு பாருங்கள். .குறிப்பாக தாம்பரம் பல்லாவரம், அம்பத்தூர் ஆவடி போன்ற பகுதிகளில் 600 சதுரடி வாங்க சராசரி 20 ..25 லட்சம் செலவாகிறது. 

தண்ணீர் தான் இப்பொது மக்களை யோசிக்க வைக்கிறது...தப்பு பண்ணிட்டோமோ..! என யோசிக்கிறார்கள்..கொஞ்சம் மழையடித்து தண்ணீர் கிடைத்துவிட்டால் மறுபடியும் மறந்து போய்விட இனி முடியாது. தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு அந்த புத்தியை மக்களுக்கு கொடுப்பதற்காகவே வந்திருப்பதாக தெரிகிறது..

Related imageதண்ணீர் இல்லா பகுதிக்கு ஏன் இவ்வளவு கொட்டி கொடுக்க வேண்டும்.  இது ஏதோ தனி மனிதனுக்கு மட்டுமல்ல, பல நூறு தொழிலார்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிற்சாலைகளும் தண்ணீர் தட்டுப்பாட்டில் அவதியுறுகின்றன. 

இந்த தண்ணீர் தட்டுப்பாட்டால் ரியல் எஸ்டேட்  மற்றும் புறநகர்களை கண்டிப்பாக பாதிக்கும். இதற்கு பெரிய ஆய்வெல்லாம் செய்ய வேண்டாம் , தானா புரியும் என சொல்லறது தண்ணீர் தட்டுப்பாடு.  

இனி மரம் நட சொல்ல்வார்கள் , குளம் வெட்ட சொல்வார்கள்..

நகராட்சி வழங்கும் தண்ணீர்க்காக இரவு பகலாக காத்திருக்கிறார்கள்..அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்கிற கோரிக்கை ஒரு புறம். தரம் அற்ற தண்ணீர் விற்பனை செய்ததாக 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை என எங்கு நோக்கினும் தண்ணீர் பிரச்னையில் தள்ளாடுகிறது சென்னை.

இந்நிலையில், ஏற்கனவே துவண்டு போயுள்ள ரியல் எஸ்டேட் தொழில், தண்ணீர் பிரச்னையால் இருப்பதை  காட்டிலும் மேலும் நொடிந்து போகும்.

Image result for water scarcity in chennai

அப்படியெல்லாம் இல்லை, தண்ணீர் பஞ்சம் என்ன புதுசா என கேட்கலாம்.ஆனால் நிலத்தடி நீர் நோக்கி மக்கள் பயணபடுக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தை சுற்றியுள்ள இடங்களின் விலையேற்றம் பெரிதாக இருக்காது. நிலத்தின் மதிப்பை ரியல் எஸ்டேட் வணிகர்களும், அரசின் வீடு மனைக்கான மதிப்பை  (Guide Line value) அரசம்  குறைக்காமல் இருக்கலாம்... ஆனால் இயற்கை நினைத்தால் குறைக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

English Summary

Water famine in Chennai .. Real estate business ..!

Latest Articles

KOLNews