தமிழ்நாட்டில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-1-2022) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே கட்டுப்பாடுகள் இன்றும் தொடரும். அதன்படி,
மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் உணவகங்கள் பொறுத்தவரை பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி உண்டு . அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம். அதே போல திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம். காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும்புறநகர் ரயில் சேவை செயல்படும்.
கட்பாடுகளாக பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
What is banned, what is allowed? - Today's lockdown rules