KOLNews

செடி சொல்லும் செய்தி என்ன..?

ஒரு ஊரில் வாழ்ந்த இரண்டு பக்கத்துவீட்டுகாரகள் தங்கள் தோட்டத்தில் செடிகள் வளர்த்து வந்தனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஆசிரியர், இன்னொருவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட்.  ஆசிரியர் தனது செடிகளு க்கு சிறிய அளவு தண்ணீர் ஊற்றி வந்தார், எப்போதும் அவற்றின் மீது முழு கவனம் செலுத்தவில்லை, அதே நேரத்தில்  இன்சூரன்ஸ் ஏஜென்ட். தனது செடிகளுக்கு நிறைய தண்ணீரைக் ஊற்றி அவற்றை நன்றாக கவனித்து வந்தார்.

ஒரு நாள், இரவு நேரத்தில், ஒரு சிறிய புயல் காரணமாக பலத்த மழையும் காற்றும் ஏற்பட்டது. அடுத்த நாள் காலை,  இருவரும் தங்கள் தோட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய வெளியே வந்தனர்.  இன்சூரன்ஸ் ஏஜென்ட் இருந்த பக்கத்து வீட்டுக்காரர், அவரது செடிகள், தங்களது வேர்களில் இருந்து வெளியே வந்து முற்றிலும் சேதமாகியிருப்பதை கண்டார். ஆனால், ஓய்வுபெற்ற ஆசிரியரின் செடிகள் சேதமடையவில்லை, உறுதியாக இருந்தன.

இதனை கண்டு ஆச்சரியப்பட்ட  இன்சூரன்ஸ் ஏஜென்ட்,  ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் சென்று, “நாம் இருவரும் ஒரே செடிகளை ஒன்றாக வளர்த்தோம், நீங்கள் பராமரித்ததை விட, நான்  என் செடிகளை நன்றாக கவனித்தேன், அத்துடன் அவற்றிற்கு அதிக தண்ணீர் ஊற்றினேன். ஆனாலும், என் செடிகளின் வேர்கள் மண்ணிலிருந்து வெளியில் வந்து விட்டன. அனால் உங்களுடைய செடிகள் உறுதியாக உள்ளதே..! அது எப்படி சாத்தியம்?" என கேட்டார்.

Root Out Rootworms | Syngenta Thrive

ஓய்வுபெற்ற ஆசிரியர் புன்னகைத்து, “நீங்கள் உங்கள் செடிகளுக்கு அதிக கவனத்தையும்,  தண்ணீரையும் கொடுத்தீர்கள், ஆனால் அதன் காரணமாக அவை உழைக்கத் தேவையில்லாமல் போனது.  நான் அவர்களுக்கு குறைவான தண்ணீரையே  கொடுத்தேன், அவற்றின் வேர்கள் மேலும் தேடட்டும். என்று, அதன் காரணமாக, அவற்றின் வேர்கள் ஆழமாகச் சென்று, அவற்றின் நிலையை வலிமையாக்கியது. அதனால்தான் என் செடிகள் பிழைத்தன ” என்றார். 

நீதி - உங்கள் குழந்தைகள் செடிகளை போன்றவர்கள். அவர்களுக்கு அனைத்துமே வழங்கப்பட்டால்,  அவர்கள் உழைக்கக் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.. சில நேரங்களில் அவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு வழிகாட்டுவது நல்லது. எப்படி நடப்பது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள், அதன் மூலம் அவர்கள் பாதையை அவர்களே தீர்மானிக்கட்டும். 

English Summary

What is the message of the plant ..?

Latest Articles

KOLNews