KOLNews

தமிழகத்தில், அரசு பேருந்து போக்குவரத்துக்கு எப்போது துவங்கும் ..?

4ஆம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து தென் மாநிலங்களில், பொது போக்குவரத்து துவங்கி உள்ளது. அந்த மாநிலங்களை விட, கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழகத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி தரப்படவில்லை. 

இதற்கிடையே தமிழகத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள், 'பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி ஜவஹர் கூறுகையில், 'தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், பொது போக்குவரத்தை அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பஸ் மற்றும் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களின் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு தான் அறிவிக்கும் என, அரசு தெரிவித்துள்ளது. அதனால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த, மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து, அரசு நெறிமுறைகளை வகுக்கும் என, எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்தார்

English Summary

When will the state bus service start?

Latest Articles

KOLNews