KOLNews

தகுதியானவர் யார் ? - 'சுண்டெலிக் கதை' சொல்லும் உண்மை ..!

ஒரு ராணுவ முகாமில் , உயர் அதிகாரியின் அறைக்குள் ஒரு சுண்டெலி நுழைந்து கொண்டு பெரும் தொல்லை கொடுத்தது . ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி , தமது கைத் துப்பாக்கியால் எலியைக் குறிவைத்தார் . அவர் ஒவ்வொரு முறை சுடும்போதும் எலி தாவிக் குதித்து இங்கும் அங்குமாக ஓடியது .

போர்க்களத்தில் பல வீரர்களைக் குறி தவறாமல் சுட்டு வீழ்த்திய அதிகாரியோ , குண்டுகள் வீணாகியும் எலி யைச் சுட முடியவில்லையே எனக் கோபம் கொண்டார் . சப்தம் கேட்டு உள்ளே வந்த அவரது பணியாளர் , ஐயா சுடாதீர்கள் , சுண்டெலியை ஒழிக்க நான் வழி செய்கிறேன் ' என்று கூறி , அறையின் மூலையில் இருந்த விளக்குமாற்றால் சுண்டெலியை அடித்தார் . எலியும் இறந்தது . 

சுண்டெலியை ஒழிக்கத் துப்பாக்கியும் தேவை இல்லை . ராணுவ அதிகாரியும் தேவையில்லை . விளக்கு மாற்றை உபயோகிக்கத் தெரிந்த சாதாரணப்பணியாளர் போதும் . அதுபோல , எல்லா சமூதாய பணிகளுக்கும் பெரும் கல்வியாளர்கள் தேவை இல்லை . சமுதாய உணர்வும் , அர்ப்பணிப்பும் கொண்டவர்களைத்தான் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் . அப்போதுதான் வெற்றி கிடைக்கும் 

English Summary

Who qualifies? - 'Mouse story' tells true ..!

Latest Articles

KOLNews