KOLNews

இப்படி செய்யலாமா விஜய் சேதுபதி..? - கேள்வி எழுப்பும் வணிகர்கள்

நடிகர் விஜய்சேதுபதி. திரைப்படங்களில் நடிப்பதோடு சில விளம்பரங்களிலும் தலைகாட்டி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, உலகமயமாக்கலுக்கு பின் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் சிறு வணிகர்களின் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை என்கிற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில், பொதுமக்கள் நேரடியாக சென்று வணிகம் செய்யும் முறைகுறைந்து வருகிறது. அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் ஆன்லைன் மூலம் வணிகம் செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.  சிறுகுறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து ஆன்லைன் வணிகத்திற்கு எதிராக  போராடி வருகிறது. 

இந்நிலையில்தான் விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது - 

சமூக அக்கறையுள்ள நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வாக்கு நிறைந்த நடிகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இது போன்ற தனியார் ஆன்லைன் நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் மக்கள் அந்த விளம்பரத்தினை கூடுதலாக கவனிக்கும் நிலை ஏற்படும். விளம்பரம் மூலம் ஆன்லைன் வணிகம் பெருகும். இதனால் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிப்படையக்கூடும் என்பதால், விஜய்சேதுபதி இது போன்ற நடிக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு, வரும் 5ம் தேதி விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்ருப்பதாக அறிவித்துள்ளனர்.

இருப்பினும், சாமானியனின் பிரச்சனைகள் குறித்த கதாபாத்திரங்களில் உணர்வுபூர்வமாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு தங்கள் உணர்வு புரியும் என்றும் சில வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

English Summary

Why Vijay Sethupathi .? - Traders asking

Latest Articles

KOLNews