KOLNews

உலக நாயகனே ..! - ஒதிஷா பல்கலைகழகம் சார்பில் கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பின் அதிக கதாபாத்திரங்களில், தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது அரசியலிலும் தன்  முத்திரையை பதிக்கும் முயற்சியில் உள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

ஏற்கனவே, நடிகர் கமல் ஹாசன்  தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ , பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது தெரிந்ததே..

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஒதிஷா பல்கலைக்கழகம்  சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது. .

செவ்வாயன்று ஒதிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், மாநில முதல்வர் முதல்வர் நவீன் பட்நாயக் அந்த பட்டத்தினை வழங்கவுள்ளார்  

இந்த தகவல் உலகெங்கும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 

English Summary

World hero ..! - Kamal receives honorary doctorate on behalf of Odisha University

Latest Articles

KOLNews