KOLNews

பிரபல ஓட்டல் உணவில் புழு..! - சென்னை மக்கள் அதிர்ச்சி..!

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது  பிரபல ஓட்டல் 'முருகன் இட்லி கடை' யின் சமையல் கூடம் .அங்கு தயாரிக்கப்பட்ட சாப்பாட்டில் புழுக்கள் கிடந்த புகார் காரணமாக, அந்த சமையல் கூடத்திற்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் முழுக்க பல கிளைகளை கொண்டது   முருகன் இட்லி கடை. அம்பத்துார் தொழிற்பேட்டை இரண்டாவது தெருவில் உள்ள, சமையல் கூடத்தில் இருந்து தான், உணவு தயாரிக்கப்படுகிறது.அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலை இருந்துள்ளது. சமையல் கூடத்தில், பூச்சி கட்டுப்பாட்டு முறைகளும் சரியாக பின்பற்றவில்லை.மேலும், சமையல் கூடத்திற்கான, தரக் கட்டுப்பாடு சான்றும் சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு துறையினரின் விடுத்த எச்சரிக்கையையு ம் அந்த நிறுவனம் அலட்சியப்படுத்தி உள்ளது.இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள, முருகன் இட்லி கடை ஓட்டலில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், 7ம் தேதி, பகல் உணவு சாப்பிட்டிருக்கிறார்.அதில், நன்கு வளர்ந்த புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்திருக்கிறார். மேலும், சுகாதாரமற்ற உணவு குறித்து, 'வாட்ஸ் ஆப்' செயலி மூலம், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் செய்தார்.

புகாரையடுத்து , திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், முருகன் இட்லி கடை சமையல் கூடத்தில், ஆய்வு செய்தனர்.ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், சுகாதாரமற்ற நிலையில் இருந்த, சமையல் கூடத்திற்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்; மேலும், அதற்கான அறிவிப்பை அங்கு ஒட்டினர்.

Image result for murugan idli kadai

தவிர, உரிய விளக்கம் அளிக்கும் வரையில், இந்த சமையல் கூடத்தில், உணவு தயாரிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர் 

English Summary

Worm in popular restaurant food ..! - Chennai people shocked ..!

Latest Articles

KOLNews