KOLNews

செயற்கை நீதிபதி..! - சீனாவின் புதிய கண்டுபிடிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளை பின்னுக்கு தள்ள எப்போதும் போராட்ட குணத்துடன் முனையும் சீனா  தற்போது, உலகிலேயே முதல் முறையாக  செயற்கை நுண்ணறிவு கொண்ட நீதிபதியை உருவாக்கியுள்ளது. 

இந்த யோசனை நமக்கு இல்லாம போச்சே ..! என மற்ற நாடுகளை மூக்கில் விரலை வைக்க வைத்துள்ள இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சங்களாக கீழ்கண்டவற்றை குறிப்பிடுகிறது சீனா.

இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருவார் என சீனா கூறியுள்ளது. இந்த நீதிபதி, ஷாங்காய் புடாங் மக்கள் வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டுள்ளார். 

Robot Justice: The Rise of China's 'Internet Courts'

வழக்குகளின் விசாணையை கேட்டு இந்த AI நீதிபதியால் தீர்ப்புகளை வழங்க முடியும் .

இந்த இயந்திரத்தை டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்தலாம். 

இந்த AI நீதிபதியால் பில்லியன் கணக்கான தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும். 

உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு நீதிபதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் 2015 முதல் 2020 வரையிலானவை.

அத்துடன்,  வழக்கறிஞர்களின் பணிச்சுமையை  குறைக்க இந்த நீதிபதி உதவுவார் என நம்பும் சீனா,  

ஆரம்ப கட்டத்தில், ஆபத்தான ஓட்டுநர்கள், கிரெடிட் கார்டு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் போன்றவற்றை தீர்க்க பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

The advent of AI judges

இருப்பினும், இந்த கண்டுபிடிப்புக்கு  சீன மக்களிடமே பெரிய  வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை, காரணம்,  தொழில்நுட்ப ரீதியாக, 97 சதவீத துல்லியமாக  தீர்ப்பு வழங்கலாம், ஆனால் எப்போது வேண்டுமானாலும் பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது  தவறு நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

"AI என்னும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், தவறைக் கண்டறிய முடிந்தாலும் , முடிவெடுப்பதில் மனிதர்களின் இடத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியாது," என்பதே  வழக்கறிஞர்கள் பலரின் கருத்தாக உள்ளது. . 

English Summary

Artificial judge ..! - China's new invention

Latest Articles

KOLNews