KOLNews

கொரோனாவுக்கும் 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பு இல்லை..! - மத்திய அரசு விளக்‍கம்

செல்போன்களின் தொழிநுட்ப முன்னேற்றம் 2ஜி, 3ஜி , 4ஜி, என முன்னேறி தற்போது 5ஜி என்கிற நிலையை எட்டியுள்ளதையடுத்து,  அண்மையில், 5ஜி சேவையை பரிசோதனை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. 

இதற்கிடையே, இந்த பரிசோதனையால் எழுந்துள்ள கதிர்வீச்சினால்தான் நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பலரும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற தயக்கம் காட்டும் சுழல் உள்ளது. 

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, கொரோனா பரவலுக்கும் 5ஜி தொழில்நுட்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, தொலைத் தொடர்பு இணைப்புகளால் இந்தியாவில் கொரோனா பரவுகிறது என்பது பொய்யான தகவல் என்றும், இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனை இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

English Summary

Corona has nothing to do with 5G technology ..! - Central Government Interpretation

Latest Articles

KOLNews