KOLNews

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட் – இஸ்ரோ சாதனை

பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட் இன்று (ஏப்.,01) காலை 9.27 க்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது.

உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்களும் பார்க்கும் வகையில், ஏவுதளங்களில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், ஸ்டேடியம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.  

English Summary

PSLV C-15 rocket - ISRO record

Latest Articles

KOLNews