KOLNews

பட்டைய கிளப்பும் பாடலுடன் மீண்டும் 'வாத்தியார்' படம்..! - எம்.ஜி.ஆர் நடிக்கும் ’பொன்னியின் செல்வன்’...!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, அவர் சினிமாவில் நடித்த காலத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்கிற ஆசை இருந்ததுடன், அதற்கான போஸ்டர் கூட வடிவமைக்கப்பட்டு , பின் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில்,சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் ,‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்தத்துடன், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நேற்று இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு,  ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

காலத்தை வென்று மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில், இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்ற பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடலை வெளியிட்டதன் மூலம்,  எம்.ஜி.ஆரின் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது  ‘வந்தியத்தேவன்’ படக்குழு.

English Summary

'Vaadhiyar' is back with the song .! - MGR starring Ponniyin Selvan..!

Latest Articles

KOLNews