KOLNews

கிகி சேலஞ் கார் இல்லாமலும் கூட செய்யலாம்; கலப்பையை வைத்து இளைஞர்கள் ஆடும் கிகி நடனம்;

சேலஞ் செய்வது தான் தற்பொது ஆன்லைனில் டிரெண்டான விஷயமாகி இருக்கிறது.  சில மாதங்களுக்கு முன்பு ஃபிட்னஸ் சேலஞ்ச் தான் இந்தியாவில் பிரபலமாகி இருந்தது.விராட் கோலி கூட மோடிக்கு ஃபிட்னஸ் சேலஞ் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து மோடியும் அந்த சேலஞ்சை ஏற்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அது கூட இணையத்திலும் மீம்ஸ்களிலும் செம வைரலாகி இருந்தது.

தற்போது வேறு ஒரு ஒரு சேலன்ஞ் உலகெங்கிலும் பிரபலமாகி இருக்கிறது. அது தான் கிகி சேலஞ். இந்த கிகி சேலஞ்சை விடுத்திருப்பவர்  ஆப்ரே கிரேக்கி  டிராகம் எனும் பிரபல பாப் பாடகர். இவர் கனடாவை சேர்ந்தவர். இவர் பாடி இருக்கும் பாப் பாடல் ஒன்றில் ”கிகி ஐ லவ் யூ” எனும் வரிகள் வரும் இடத்தில் காரை ஓட்டிக்கொண்டிருப்பவர், அதை நிறுத்தி அந்த பாடலை ஒலிக்கவிட்டபடி கீழிறங்கி நடனம் ஆட வேண்டும்.

இந்த கிகி சேலஞ்சை பல பிரபலங்களும் ஏற்று செய்திருக்கின்றனர். நடிகை ரெஜினா கூட இந்த கிகி சேலஞ்சில் ஈடு பட்டிருந்தார். இந்த விஷயத்தில் கார் ஆஃப் ஆகமல் இருக்கும். இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த சேலஞ்சை செய்ய கூடாது என போலீசார் தடை விதித்திருக்கின்றனர்.

 

பிரவின்™@praveenruler

#kikichallenge india 🇮🇳 #kiki challenge

7:33 PM - Aug 3, 2018

Twitter Ads info and privacy

 

காரில் இருந்து வெளியேறி செய்யும் இந்த கிகி நடனத்தை, வித்தியாசமான முறையில் முயன்றிருக்கின்றனர் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர்கள். வயலில் கலப்பையில் மாடுகளை கட்டி உழுது கொண்டிருக்கும் போது, மாடுகளை ஓடவிட்டு விட்டு பாதியில் இறங்கி அவர்கள் வயலில் போடும் கிகி நடனம், இப்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

English Summary

கிகி சேலஞ் கார் இல்லாமலும் கூட செய்யலாம்; கலப்பையை வைத்து இளைஞர்கள் ஆடும் கிகி நடனம்;

Latest Articles

KOLNews