KOLNews

15 வயது பாலஸ்தீனிய சிறுவன் வயிற்றில் சுடப்பட்டு கொலை..!

இலங்கையின் இறுதி கட்ட போரின் முடிவில், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின்  இளைய மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் உள்ள அனைவரையும்  கலங்க செய்தது. தற்போது அதே போல இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரால் அலி அபு ஆல்யா என்ற 15 வயது பாலஸ்தீனிய சிறுவன் வயிற்றில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பாலஸ்தீனிய சிறுவனை  இஸ்ரேலிய படைகள் மேற்குக் கரையில் சுட்டுக் கொன்றதை அமெரிக்க காங்கிரஸ் சேர்ந்த பெண் பெட்டி மெக்கோலம் கண்டித்துள்ளார்.அவர்  இந்த சம்பவத்தை "கோரமான அரசுதுணையுடன் நடைபெற்ற கொலை" என்று குறிப்பிட்டார், மேலும் இந்த சம்பவத்தை விசாரிக்க பிடன் நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

இந்த விவேகமற்ற சம்பவம் இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பின் நேரடி சாட்சி என்றும் அது  கண்டிக்கப்பட வேண்டும் என்றும் .அமெரிக்க வரி செலுத்துவோர் இஸ்ரேலுக்கு அளிக்கும் நிதி மற்றும்  எந்தவொரு இராணுவ உதவியும் ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்க உதவுவதற்காக அல்ல என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில்  முழுமையான விசாரணைக்கு பிடன் நிர்வாகத்தை தான் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அபு ஆல்யாவைக் கொன்றதைக் கண்டித்து யுனிசெப் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. "யுனிசெஃப் இஸ்ரேலிய அதிகாரிகளை அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் முழுமையாக மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், பூர்த்தி செய்ய வேண்டும், சர்வதேச சட்டத்தின்படி குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

English Summary

15-year-old Palestinian boy shot in the stomach and killed

Latest Articles

KOLNews