லண்டன்: உலகில் 8 கோடி நபர்களை பாதித்தும் கட்டுக்குள் அடங்காத .கொரோனா தொற்று, சில நாட்கள் முன் தனது அமைப்பில் சிறு மாற்றத்துடன் மேலும் வீரியமாக, ஆதாவது கூடுதலானா பரவும் வேகத்துடன் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.
ஏற்கனவே உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 32 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதுடன், அதன் தாக்கம் காரணமாக அங்கு 570 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 195 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
570 killed by corona in one day ..! - Britain in panic ..!