KOLNews

இங்கிலாந்தில்... 9,000 ஊழியர்களை பணிநீக்கம் ..! - ரோல்ஸ் ராய்ஸ் அதிரடி முடிவு

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது விமான எஞ்சின் தயாரிப்பு துறையில் குறைந்தது 9,000 ஊழியர்களை பணிநீக்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

போயிங் 787 மற்றும் ஏர்பஸ் A350 உள்ளிட்டவைகளுக்கு எஞ்சின் தயாரித்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்சுக்கு பெரும்பாலான வருவாய் விமான போக்குவரத்தை மூலமாக கிடைக்கிறது.

Rolls-Royce cutting 9,000 jobs because of coronavirus crisis in ...

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால்  உலகம் முழுவதும் விமான போக்குவரத்து பெரும்பாலும் தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்கிற நிலையில், இத்துறை பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதையடுத்து, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தன்னிடம்  பணிபுரியும் சுமார் 52,000 ஊழியர்களில் குறைந்தது 9,000 ஊழியர்களை பணியிலிருந்த விலக சொல்ல கூடும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் , அதன் ஊழியர்களில் 5ல் 1 பகுதியினர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் ஆண்டுக்கு சுமார் 1.6 பில்லியன் டாலர்கள்( அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,111 கோடிக்கும் மேல்) சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு அதிக அளவில் செலவாகும் என்றும் தெரிகிறது.

இது குறித்து அதன்  தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் கூறுகையில்,

 ‘இந்த நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் பொருளாதார பிரச்னையை சமாளிக்க இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், வணிக நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதனால் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முடிவெடுத்துள்ளது’,என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

9,000 job loss in UK ... - Rolls-Royce Action Result

Latest Articles

KOLNews