KOLNews

நெஞ்சை உருக்கும் காட்சி..! - இலங்கையில், தோண்ட தோண்ட கிடைக்கும் எலும்புக் கூடுகள்..!

அண்மையில்,  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போன 20ஆயிரம் பேர் மரணித்திருக்கலாம், என சர்வ சாதாரணமாக இலங்கை அரசு தரப்பில் சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். 

இந்நிலையில், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த, முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள, மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில், நேற்று புதிதாக கட்டடம்  குழிகள் தோண்ட முயல்கையில் அங்கு கண்ணிவெடிகள் புதையுண்டு இருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த போலீசார், நிபுணர்களின் உதவியுடன் கண்ணிவெடிகளை அகற்ற முயன்ற போது, அங்கு, மனித எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்தது.

அப்போது, அங்கு நுாற்றுக்காணக்கானவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அப்பகுதி போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அப்பகுதியில் புதையுண்டுள்ள மனித எலும்புகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.'பணிகள் முழுமையான நிறைவடைந்த பின்னரே, எவ்வளவு எலும்புக்கூடுகள் புதையுண்டு உள்ளன என்ற விவரம் தெரியவரும்' என, போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதியை ஆய்வு செய்த, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார், 'எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, எலும்பு கூடுகள் உள்ள அந்த பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், உள்நாட்டுப் போரின் போது, தமிழர்களை கொன்று இங்கு புதைத்திருக்கலாம். இலங்கை அரசு இதை மூடிமறைக்கவோ, அல்லது பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் எலும்புகள் தான் கிடைத்துள்ளன என, திசை திருப்ப முயலவும் வாய்ப்புகள் உள்ளன' என, இலங்கைத் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

A heartbreaking scene ..! - In Sri Lanka, the skeletons available while digging ..!

Latest Articles

KOLNews