KOLNews

ஒரு புது வைரஸ்..! - ஒருவர் பலி

 'கொரோனா' வைரஸ் சமூகமே மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சீனாவிலிருந்தே மற்றொரு வைரஸ் கிளம்பியுள்ளது. அதன் மூலம் முதல் உயிரிழப்பும் ஏற்பட்டுவிட்டது.

தற்போது சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 'ஹன்டா' வைரஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், மீண்டும் அங்கு பீதி ஏற்பட்டு உள்ளது.

யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, சென்ற பஸ் பயணி ஒருவருக்கு  திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். வரி உடலை பரிசோதித்ததில் , அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.

அதனையடுத்து அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் முடிவுகள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

English Summary

A new virus ..! - One died

Latest Articles

KOLNews