KOLNews

டிரம்ப் சொல்ல இருந்ததை வேற்றுகிரகவாசிகள் தடுத்துவிட்டார்களாம்..!

ஜெருசலேம். ஏலியன்ஸ்' எனப்படும் வேற்றுகிரஹண வாசிகள் இருக்கிறார்களா..? இல்லையா என்பது குறித்து பல்லாண்டுகாலமாய் விவாதிக்கப்பட்டு வரும்நிலையில், இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட்,  வேற்றுகிரகவாசிகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறி உலக விஞ்ஞானிகளின் புருவத்தை உயர்த்த செய்துள்ளார்.

முன்னதாக அவர் இஸ்ரேலிய பத்திரிகையான ஜெருசலேம் போஸ்ட்டுக்கு  அளித்த பேட்டியில், 

"வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையே, அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது. வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. பூமியில் சோதனை நடத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இது பூமியை வேற்றுகிரகவாசிகள் ஆக்கிரமிப்பதற்கான முயற்சி அல்ல. பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்வதற்கான தேடலில் அவர்கள் மனித குலத்தையும் உதவியாக சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர்" என தெரிவித்தார். .

அத்துடன், வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்ததாகவும்  ஆனால் மக்கள் அதற்கு தயாராகவில்லை என்று வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும், 

மேலும், செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்துள்ள தாகவும், ஆதாரங்கள் ஏதுமின்றி தான் கூறுவதை  யாரும் நம்பாமல் போனாலும் விரைவில் மக்கள் உண்மையை அறிவார்கள், என்றார் .

English Summary

Aliens may have blocked what Trump had to say ..!

Latest Articles

KOLNews