1953ஆம் ஆண்டுக்குப் பின் அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அப்படி என்ன குற்றம் செய்யாதார்..?
சீரியல் விழிகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு கொடும் செயலை செய்தவர் லிசா மாண்ட்கோமேரி என்கிற 43 வயது பெண். இவர் தான் கர்ப்பமடையாத காழ்ப்புணர்ச்சியை, கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட்(23) என்ற பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்தத்துடன், அவரது வயிற்றை கிழித்து, அவரது கருவிலிருந்த குழந்தையையும் திருடிக்கொண்டார்.
மேலும், திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று, அது தனது குழந்தைபோல் காட்டிக்கொண்டார். இதை சாமர்த்தியமாக கண்டு பிடித்த போலீசார் லிசாவை கைது செய்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு பாபி ஜோ கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என்ற அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லிசா செய்த குற்றத்திற்கு தண்டனையாக வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. விஷ ஊசி மூலம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
English Summary
American woman guilty..! - Death sentence by poison injection soon ..!