KOLNews

அதிபர் தேர்தலுக்கு இடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம்..! - இலங்கையில் பரபரப்பு..!

கொழும்பு, இலங்கையில் , இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அதிகாலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.  கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 240 கி.மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு போலீஸ் தரப்பில் கூறுகையில், “ இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் வந்து கொண்டிருக்கையில் , சாலையின் குறுக்கே டயர்களை தீயிட்டு எரித்து தற்காலிக தடைகளை ஏற்படுத்திய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதோடு கற்களையும் பேருந்துகள் மீது வீசினர். 

இருப்பினும் தற்போது, வரை உயிர்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை” என்றனர். 

துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார், சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தடுப்புகளை அகற்றியதோடு, வாக்காளர்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்றனர். 

இலங்கை,புட்டலம் பகுதியில் இருந்து முஸ்லீம் வாக்காளர்கள்,  வாக்குப்பதிவு மையம் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.  

அதனையடுத்து,  வாக்காளர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

English Summary

Amidst the presidential election, shooting incident ..! Sri Lanka ..

Latest Articles

KOLNews