KOLNews

கொரோனாவுக்கு நண்பர்களை பலிகொடுக்க முடியாது..! - ஜாக்கிசான் எடுத்த முக்கிய முடிவு..!

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன்,அதனால் இறப்போர்  வருவது தெரிந்ததே.. தற்போது வரை இந்த கொரோனா வைரசிற்கு 908 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கொரோனா பரவாமல் இருக்க சீனா உட்பட பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நோயை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. 

Image result for jackie chan crying

இதற்கிடையே,  இது குறித்து பேசியுள்ள பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி ஜான், "இந்த கொரோனா வைரசால் தினந்தோறும் பல உயிர்கள்  பலியாகிறது. இ்நத கொரோனா வைரசினை தடுக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிக முக்கியம். அதனால் வைரசினை கட்டுப்படுத்த விரைவில் புதிய மருத்துகளை கண்டுபடிக்கமுடியும் என நம்புகிறேன். எனனுடைய நண்பர்கள்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சீன மருத்துவர்களும் கொரோனாவுக்கு எதிராக பல செயல்படுகளையும் நடத்தியும் உயிர்பலியாவது நிற்கவில்லை.

ஒரு தனி நபரோ அல்லது குழுவாகவோ சேர்ந்து கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு 1 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 1,02,21,520.00 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே..",

என  கூறியுள்ளார்.

English Summary

Can't sacrifice friends for Corona ..! - The main decision made by Jackie chan ..!

Latest Articles

KOLNews