KOLNews

செவ்வாய் கிரகத்தில் சீனா..! - வெற்றிகரமாக தரையிறங்கியது ரோந்து வாகனம்

செவ்வாய் கிரகம் குறித்த ஆர்வம் உலகமெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்களிடையே இருந்து வருது தெரிந்தே.. இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா அனுப்பிய ரோந்து வாகனம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.தற்போது அமெரிக்கா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

China names first Mars rover 'Zhurong' - The Statesman

இதற்கிடையே, 'தியான்வென்1' என்ற விண்கலத்தை அனுப்பியுள்ள சீனா அதில் உள்ள, 'ஜூரோங்க்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' எனப்படும் ரோந்து வாகனத்தை , நேற்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறக்கியது. அது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பு குறித்த சோதனையில் ஈடுபட உள்ளது.ஆறு சக்கரங்களுடன், 240 கிலோ எடையுள்ள இந்த ரோந்து வாகனத்தில், ஆறு முக்கிய அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அது அடுத்த மூன்று மாதங்கள் செவ்வாயின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிபிடத்தக்கது .

English Summary

China on Mars ..! - Successfully landed patrol vehicle

Latest Articles

KOLNews