KOLNews

காலநிலை மாற்றம் - உங்களது உணவினால் பூமி சூடாகுமா ?

நீங்கள் ஒருவிருந்துக்கு செல்கிறீர்கள். அங்கு பலவகையான அருசுவை உணவுகள் பரிமாறப்படுகின்றன. முக்கியமாக இன்றைய தலைமுறையினர் விரும்புகின்ற புரோட்டா பீட்சா பர்கர் உள்ளிட்ட பல வகை உணவுகள் பரிமாறப்படுகின்றன. நீங்கள் அவற்றை சாப்பிடும் முன்னர் அந்த உணவு நாம் வாழும் புவியை சூடாக்கி அதன் விளைவாக காலநிலைமாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியுமா?,  அதிர்ச்சி அடையாதீர்கள். இதே விசயத்தைத்தான் உலக காலநிலை மாற்றத்திற்கான பாரீஸ் மாநாட்டில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது, தற்போது அதை சற்று விரிவாக பார்ப்போம்.

Excessive use of Pizza and burgers causes Cancer - ACCA Study Material

நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவும், அவற்றின் கழிவுகளாக கீழே கொட்டப்படுபவையும், உடல் நலத்தை மட்டுமின்றி பூமியின் மீதும் அழுத்த்தை எற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2020 செப்டம்பரில் ஐநாவின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, உலக வனவிவலங்கு நிதி அமைப்பு, ஈட் என்று அமைப்பு, காலநிலை மாற்றத்தின் மீதான கவனம் என்ற அமைப்பு ஆகிய 4 அமைப்புகளும் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன..அவை வெளியிட்ட ஆய்வறிக்கையில் மொத்த உணவு உற்பத்திப் போக்கில் உணவுப்பயிர் பயிரிடுவதிலிருந்து தொடங்கி அறுவடை செய்வதிலும் அவற்றை சந்தைப்படுத்துவதிலும் அவற்றின் நுகர்விலும் போக்குவரத்திலும் மற்றும் அவை அகற்றப்படுவதிலும் அது தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளிலும்  வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் 7.8 பில்லியன் மக்கள் ஈடுபடுகின்றனர் .

இந்த நடவடிக்கைகளிலும் இது போன்ற ஒட்டு மொத்த மனித நடவடிக்கைகளினாலும் 21லிருந்து 37 விழுக்காடு வரையிலான பசுமை இல்ல வாயுக்களை வெயிடுகின்றன. இங்கு உணவு தயாரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் மின்சாரம் வெப்ப உற்பத்தி ஆகியவற்றினால் மட்டும் 25 விழுக்காடு பசுமை இல்ல வாய்க்கள் உற்பத்தியாகின்றன. தொழிற்சாலைகளின் மூலமாக21 விழுக்காடும் போக்குவரத்தின் மூலம் 14 விழுக்காடும் கட்டிடங்கள் மற்றும் எரிசக்கியை செலவழிப்பதன் மூலமாக 16 விழுக்காடும் பசுமை இல்லவாயுக்களை வெளியிடுகின்றன.

Greenhouse gases in atmosphere hit new high: UN - Egypt Independent

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அளித்துள்ள அறிக்கையின்படி வரும் 2050ல் 10 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டிய தேவை உள்ளது இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அதில் பசுமை இல்ல வாயுக்களை உண்டாக்கும் அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தினர். உணவு உற்பத்தியை மட்டும் அனுமதித்தனர் பின்னர் உணவு உற்பத்தியானது எவ்வளவு பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்தது என்பதை அளவிட்டு அதை மற்று உற்பத்திகளுடன் ஒப்பிட்டனர். அதில் அவர்கள் வந்தடைந்த முடிவு இதுதான். மற்ற பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்யும் மற்ற உற்பத்தியை விட,  உணவு உற்பத்தி மட்டுமே பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ள 1.5 சி அளவை அடைவது என்ற இலக்கை தொடும் வரை பூமியை சூடாக்குவதற்கான பசுமை இல்ல வாயுககளை விட முடியும் என்பதைக் கண்டறிந்தனர்.(இந்த அளவானது 2050லிருந்து 2063 வரை உள்ள காலத்திற்குள் அடையப்பட வேண்டும்)

இந்த ஆய்வின் முடிவுகள் வியப்பை தரலாம். ஏனெனிவ் கரியமில வாயுவை ஈர்த்துக் கொண்டு நமக்கு நல்ல காற்றை அளிக்கின்றன அது உணவுச்சேர்க்கையின் மூலம் நடைபெறுகிறது என்றுதான் நாம் படித்திருக்கிறோம். அது உண்மையும் கூட. ஆனால் அதில் இன்னொரு உண்மையும் அடங்கியிருக்கிறது அதே தாவரங்கள் மரணித்து அழுகத்தொடங்கினால் ஏராளமான அளவு கரியமில வாயுவை வெளியிடுகின்றன என்பது பலருக்கும் தெரியாது. 

7 cooking activities that can make indoor air as harmful as city smog -  Clean Air Goals

உணவு உற்பத்தியில் பல கட்டங்களில் கரியமில வாயு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடப்படுகின்றது. உதாரணமாக பண்ணைகள் அமைப்பதற்கு காடுகள் தோட்டங்கள் அமைக்கப்படுவதற்கு அது பெரிய கரியமில வாயு ஈர்ப்பதற்கான தொட்டியாக உள்ளதும் அழிக்கப்படுகிறது. அது மறைமுகமாக பெரிய அளவில் பசுமை இல்ல வாயுக்கள் வாயு மண்டலத்தில் அதிகமான அளவில் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. பண்ணையிலோஅல்லது பயன்படுத்தப்படும் மற்ற எந்திரங்களினாலோ அவற்றுக்கான எரிபொருளின் விளைவாலும் ஆவற்றில் பயன்படுத்தப்படும் விவசாய ரசாயனங்கள் ஆகியவற்றில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாகின்றன. இதைத்தவிர கால்நடைகள் மற்றும் விலங்குகள் இடும் கழிவுகள் மற்றும் சாணங்கள் மீத்தேன் வாயுக்கும் காரணமாகின்றன.

ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நிலப்பயன்பாட்டை மாற்றுவதையும் இயற்கையான வசிப்பிடங்களையும் மாற்றுவதை குறைத்தால் ஆண்டுக்கு 4.5 கிகாடோன் அளவு (1 கிகாடோன் 1000 கிலோவுக்கு சமமானதாகும்) கரியமிலவாயு குறையும். உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதன் முலம் கரியமில வாயுக்கள் வெளியிடுவதை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

தொல்படிம எரிபொருட்களான பெட்ரோல்,நிலக்கரி டீசல் குருடாயில் போன்ற புதுப்பிக்க முடியாத எரிபொருட்கள் அதிகமான கரியமில் வாயுவையும் பசுமை இல்ல வாய்கக்களையும் வெளியிடுகின்றன என்பதால் அதற்கு பதிலாக புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியான சூரிய ஒளி மற்றும் காற்றாலைகளை பயன்படுத்துவது சாத்தியம். அதே போல தொல்படிம எரிபொருள்களான பெட்ரோல் டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக பேட்டரியினால் அல்லது மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதும் சாத்தியமாகலாம் ஆனால் உணவு முறையை மாற்றுவது கடினமான ஒன்று. இது தொடர்பாக 2018லிருந்தே அறிவியலாளர்கள் உணவு முறைகள், மனிதனின் ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

Free Vector | House with solar panels and wind mills. eco home

இன்னொரு பக்கம் இன்னமும் பசி பட்டினி ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றினால் மக்கள் நோய்வாய்பட்டுக் கொண்டிருக்கின்றனர என்ற உண்மையும் நமது முகத்திலறைகிறது. 820 மில்லியன் மக்கள் போதுமான உணவு உண்பதில்லை தரம் குறைந்த உணவையே எடுத்துக் கொள்கின்றனர் இதன் விளைவாக ஊட்டச்சத்தின்மை ஊளைச்சதையினால் உடல் பருமனாவது இதனைத் தொடர்ந்து தொற்று அல்லாத இதயக் கோளாறுகள் நீரழிவு போன்ற நோய்களும் சத்துக் குறைபாட்டினால் வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படுவதாக ஈட்லான்செட் ஆணையம் தனது உணவு பூமி மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கூறகிறது  இந்த ஆணையமானது உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து 37 அறிவியலாளர்களை இணைத்து ஒரு கேள்விக்கான பதிலை ஆய்வின் மூலமாக தேடியது. அந்த கேள்வி இதுதான். நாம் பூமியின் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையையும் பாதிக்காமல் அதன் வரம்புகள் மற்றும் எல்லைகளை தாண்டாமல் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற 10 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியுமா ?

ஆணையமானது உணவு முறைகளை மாற்றி அமைப்பதற்கான உலக இலக்குகளை நிலைத்த வளர்ச்சி அடிப்படையிலும் மனித குவத்தின் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் வகையில் நிர்ண்யித்திருந்தது. ஏனெனில் உணவு தயாரிப்பிலிருந்து வெளியேறும் 14 ஐகா டன் கரியமில வாயுவை வரும் 2050ற்குள் நீக்குவது என்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் அது தாவரங்கள் மற்றும் விலங்குகளின உயிரியல் போக்குடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆணையமானது உணவு முறைகளுககான இலக்கை

சாத்தியமான 5 ஐகா டன்களாக குறைத்தது. மீதியுள்ள 9 ஐகா டன்களை உணவுகளை மாற்றுவது,உணவு உற்பத்தி நடைமுறைகளை மாற்றுவது, உணவு உற்பத்தி சங்கிலியில் உள்ள கரியமிலவாய்வை நீக்குவது மற்றும் உணவு வீணாவதையும் கழிவுகளையும் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சாத்தியமாக்குவது. இவற்றின் மூலமாக பூமியின் வரம்புகளுக்குள் அதாவது பசுமை இல்ல வாயுக்களை கட்டுபடுத்துவது என்று திட்டமிட்டுள்ளது. ஆணையமானது இவ்வாறான முறையில் முதல் முறையாக உலக உணவு முறையை அதாவது பூமியின் ஆரோக்கியத்திற்கான உணவை முன்வைத்து அதன் மூலம் வரும் 10 ஆண்டுகளுக்குள் 60 விழுக்காடு கரியமில வாயுக்களை குறைத்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளது.

-----------------------------------------

கட்டுரையாளர் - மெய்.சேது ராமலிங்கம்

English Summary

Climate change - is your diet warming the earth?

Latest Articles

KOLNews