KOLNews

கொரோனா 3வது அலை..? - எச்சரிக்கையுடன் செயல்படும் பிரிட்டன்..!

பிரிட்டனை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட கொரோனா  இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் . தற்போது பரவி வரும் ஆபத்தான டெல்டா வைரஸ் கொரோனா தான் , மூன்றாம் அலையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் . 

ஏற்கனவே, பிரிட்டனில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும்  என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், . டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் முன்பை விட மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் , அனைவருக்கும் இரண்டாவது போஸ் தடுப்பூசி செதுக்க வேண்டும் எனவும் பிரிட்டன் மக்களிடம் வலியுறுத்தபட்டுவருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இங்கிலாந்திடம் இருந்து வந்தியா பாடம் கற்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார் .அதாவது, ". தற்போது இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு மாதக்கணக்கில் ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது . 18 வயதுக்கு மேற்பட்டோரில் 8 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . 50 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது . எனினும் முன்னெச்சரிக்கையாக - இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது . இதன் காரணமாக அந்த நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் ஒருவேளை கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2 வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை மீண்டும் சந்திக்க நேரிடும்", என அவர் எச்சரித்துள்ளார் . 

English Summary

Corona 3rd wave ..? - Britain acting with caution ..!

Latest Articles

KOLNews