KOLNews

அதீத வீரியத்துடன் மீண்டும் கொரோனா..! - கதிகலங்கி போயுள்ள இங்கிலாந்து

கொரோனா தாக்கத்தால் உலகமே அவதிக்குளான நிலையில், இங்கிலாந்தில் முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு,  முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் கொரோனா தாக்கம் அங்கு குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பேரதிர்ச்சியாக  கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொடும் வகையில்,  நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக உள்ளதாக உணர்ந்துள்ளனர்.

அதையடுத்து, அங்கு நாடுமுழுவதும் 3 அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மூலம் சற்று தணிந்திருந்த வைரஸ் தாக்கம் மீண்டும்  தங்கள் நாட்டுக்கும் பரவி விடுமோஎன்கிற அச்சத்தில் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்து உள்ளன. இதற்கிடையே, இந்தியாவும் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர  நாளை (செவ்வாய்க்கிழமை)  நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதித்து உள்ளது.

English Summary

Corona again with extreme vigor ..! - England in shock

Latest Articles

KOLNews