KOLNews

கொரோனா அதிகரிப்பு எதிரொலி..! - சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகள்..!

இந்தியாவை போலவே சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், இன்று  முதல் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்‍கு வருகின்றன. 

அண்மை நாட்களாக சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதையடுத்து அங்கு, மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்‍கு வருகின்றன. இன்று தொடங்கி, ஜூன் மாதம் 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்‍கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. 

அதன்படி, உணவகங்களில் பொதுமக்‍களை அனுமதிக்‍க தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்‍கும் என அரசு அறிவித்துள்ளது. அதே போல, குடும்ப விழாக்‍களில் 2 பேருக்‍கும் அதிகமானோர் பங்கேற்கவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதையொட்டி உள்நாட்டு செலாவணியின் மதிப்பும், பங்கு வர்த்தகமும் 11 மாதங்களுக்‍குப் பின் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Corona increase echo ..! - Restrictions in Singapore again ..!

Latest Articles

KOLNews