KOLNews

இளவரசர் சார்லசையும் விட்டு வைக்காத கரோனா..! - உறுதி செய்யப்பட்ட தொற்று

கரோனா தொற்று, ஏழை, பணக்காரன், ஜாதி மதம் என பாரபட்சமின்றி தாக்கிவருகிறது. ஹாலிவுட் நடிகராக இருந்தாலும் சரி, ஒரு நாட்டு பிரதமரின் மனைவியாய் இருந்தாலும் சரி..விடமாட்டேன்..!  என உலகை ஒரு கை பார்த்து வருகிறது. அதனால் தான் அதிகார வர்க்கம் இந்த வைரசை தடுக்க உண்மையிலேயே முழு மனதுடன் தடுக்க போர் கால நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூட விமர்சனகள் எழுகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் குடும்பத்திலும் தன மூக்கை நுழைத்து விட்டான் 'கரோனா' கொடூரன். ஆமாம், இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

71 வயதாகும் இளவரசர்  சார்ஸுக்கு கரோனா பாதிப்பு இருப்பதை க்ளாரன்ஸ் மாளிகை உறுதி செய்துள்ளது.

அவருக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அந்த சோதனையில் இளவரசர் சார்லஸுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தற்போது ஸ்காட்லாந்தில் தங்கியிருக்கும் , இளவரசரும், அவரது மனைவியும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இளவரசர் சார்லஸின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, அவர் கடந்த சில வாரங்களாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், அவருக்கு யாரிடம் இருந்து கரோனா பரவியிருக்கும் என்பதை  கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

English Summary

Corona not leaving Prince Charles ..! - Confirmed infection

Latest Articles

KOLNews