KOLNews

பிரேசில் கால்பந்து 'சூப்பர் ஸ்டார்' நெய்மருக்கு கொரோனா

பிரேசிலின் பிரபல காலபந்து வீரர் நெய்மர், பாரிஸ் சாயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி).எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 

அண்மையில்  நடந்த யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக் தொடரின் பைனலில், பைரன் முனிச் கிளப் அணியுடன்,  பி.எஸ்.ஜி அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், அணியில் உள்ள வீரர்களுக்கு நடந்த உடல் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. சமீபத்திய சாம்பியன் ஷிப் போட்டிக்கு பின் கழித்த விடுமுறையில் இந்த தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவதாக சொல்லப்படுகிறது.அதே போல இவரின் சக அர்ஜென்டினா வீரர்களான ஏஞ்சல் டிமரியா, லியான்டிரோ ப்ரேடஸ் ஆகிய வீரர்களுக்கும் கொரோனா அறிகுறி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதையடுத்து,  பி.எஸ்.ஜி., கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

English Summary

Corona to Brazilian football 'superstar' Neymar

Latest Articles

KOLNews