KOLNews

சைபர் தாக்குதல் ..! - 800 வணிக நிறுவனங்கள் திறப்பதில் சிக்கல்.

அண்மையில், அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து , ஸ்வீடன் நாட்டில் 800 கடைகளை திறக்க முடியாமல் வணிகர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . 

அமெரிக்க ஐடி நிறுவனத்தின் மென்பொருள் விநியோகிக்கும்  கசேயா மீதான ரன்சொம்வேர் ( ransomware ) சைபர் தாக்குதல் காரணமாக , ஸ்வீடனில் உள்ள கூப்பின் செயின் நிறுவனம் , தனது 800 மளிகை கடைகளை திறக்க முடியாத நிலை உருவாக்கியது . குறிப்பாக, அவற்றின் பணப் பதிவேடுகள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன்  இந்த சைபர் தாக்குதலில் சுமார்  200 அமெரிக்க வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன . இது தொடர்பாக கூப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில் , " நாங்கள் இரவு முழுவதும் பாதிப்பை சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டு வருகிறோம் ' என்று தெரிவித்தார் . 

இந்நிலையில், வாரத்தின் விடுமுறை நாட்களில் பெரும்பாலான கார்ப்பரேட் ஐடி குழுக்கள் முழுமையாக பணியாற்றாத போது, ரன் சொம்வேர் சிண்டிகேட் ரெவில் கும்பல் , சுசேயா என்ற மென்பொருள் சப்ளையரை குறிவைத்து , அதன் நெட்வொர்க் மேலாண்மை தொகுப்பைப் பயன்படுக்கி கிளவுட் சேவை வழங்குநர்கள் மூலமாக வைரஸ் பரப்பியுள்ளதாக, இது தொடர்பான வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

English Summary

Cyber attack ..! - Trouble opening 800 businesses.

Latest Articles

KOLNews