KOLNews

கொரானாவால் ஏற்பட்ட பாதிப்பு.. கவுரவத்திற்கான அடையாளம்..! - 'கைப்புள்ள' யாக மாறிய டிரம்ப்

வல்லரசு என சொல்லிக்கொண்டாலும், கொரானா தொற்றால் உலகளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது அமெரிக்கா தான்.  இருப்பினும். 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்கிற ரீதியில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார். அண்மையில், 'கொரானாவுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றுவிட்டோம், அதையடுத்து பொருளாதாரத்தை சீராக்குவதே, இனி எங்களுக்கு பிரதானம்' என பேசி உலக நாடுகளை நமுட்டு சிரிப்பு சிரிக்க வைத்தார்.  

அது போதாது என்று, தற்போது ,  'கொரோனா குறித்து ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொண்டதால் தான் அதிக பாதிப்புகள் உள்ளதாகவும், அதனை கவுரவத்தின் அடையாளமாக பார்ப்பதாகவும்', கூறி, 'சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கு' எனும் வடிவேலு காமெடியை தூக்கி சாப்பிட்டுள்ளார்.   

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் மட்டும் 15.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,542 பேர் உயிரிழந்துள்ளனர். 3.08 லட்சம் பாதிப்புகளுடன் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில்,  இது குறித்து பேசியிருக்கும் டிரம்ப், "மற்ற நாடுகளை விட அதிகமான ஆய்வுகளை நடத்தியதால் தான் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. நிறைய பாதிப்புகள் என்பதை ஒரு மோசமான விஷயமாக நான் பார்க்கவில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதை நல்லதாகவே பார்க்கிறேன். இதற்கு எங்கள் சோதனை மிகவும் சிறந்தது என்று அர்த்தம். எனவே நான் இதை கவுரவத்திற்கான அடையாளமாக கருதுகிறேன். என தெரிவித்துள்ளார்.

English Summary

Damage caused by the Corona .. Sign of Honor ..! - Trump

Latest Articles

KOLNews