KOLNews

டெல்டா ரக கொரோனா வைரஸ்..! - கவலையளிக்கும் விஷயம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்

கடந்த 2020ஆம் ஆண்டு  அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பி .1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது . அதன்பின் அதுவே   மூன்ற உப ரகங்களாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டது. அதன்படி , பி புள்ளி ஒன்று புள்ளி 817 புள்ளி இரண்டு என்ற ரகத்திற்கு டெல்டா எனவும் பி புள்ளி ஒன்று புள்ளி 517 புள்ளி ஒன்று ரகத்திற்கு கப்பா என்றும் உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டப்பட்டுள்ளது . 

இந்நிலையில், டெல்டா ரக வைரஸ்  மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன் எனில் அதுவே மிக வேகமாக பரவ கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரசு வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த உலக சுகாதார நிறுவனம் கப்பா ரக வைரஸின் பரவல் மிகக்குறைவாக உள்ளதால் அது கவனிக்கப்பட வேண்டிய ரகமாக வகைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

English Summary

Delta type corona virus ..! - The World Health Organization is concerned

Latest Articles

KOLNews