KOLNews

சும்மா..தொந்தரவு பன்றாங்க..! - விஜய் மல்லையா கடுப்பு..!

பிரபல தொழில் அதிபர் மல்லையா பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் சென்றுவிட்டது தெரிந்ததே...

இந்நிலையில், அவருக்கு எதிராக அமலாக்கத் துறையும், சிபிஐ அமைப்பும் விசாரணை நடத்தி வருகிறது.

அத்துடன், பிரிட்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய விசாரணை அமைப்புகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் மல்லையா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மல்லையா வேண்டும் என்றே ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கிகளில் இருந்து கடன் வாங்கவில்லை என்று தெரிவித்தனா்.

ஆனால், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சாா்பில் வாதாடிய வழக்குரைஞா்கள், இந்திய நீதிமன்றங்களுக்கு மல்லையா பதிலளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான 3 நாள் விசாரணை கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இது குறித்து மல்லையா செய்தியாளா்களிடம் பேசுகையில், 

'சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. வங்கிகளுக்கு நான் தர வேண்டிய பணத்தை தர தயாராக இருக்கிறேன். ஆனால், அமலாக்கத் துறை எனது சொத்துகள்தான் வேண்டும் என்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக காரணமே இல்லாமல் அமலாக்கத் துறையும், சிபிஐயும் என்னை தொந்தரவு செய்து வருகின்றன'.

என்றாா் மல்லையா.

இந்நிலையில், மல்லையாவின், இந்த வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீா்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

Disturbing ..- Vijay Mallya ..!

Latest Articles

KOLNews