KOLNews

ரொம்ப சந்தோசப்படாதீங்க..! - அமெரிக்காவை எச்சரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு

லெபனான்.  ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியை கொன்றுவிட்டோம் என்று அமெரிக்கா மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்று அந்நாட்டை ஐஎஸ்ஐஎஸ் எச்சரித்துள்ளது 

கடந்த சனிக்கிழமை,  இராக்கைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48) அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். 

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி, சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியான இட்லிப்  என்ற இடத்தில் பதுங்கியிருப்பது தெரிந்து அமெரிக்க படையினர் அங்கு தாக்குதல் நடத்தினர். அப்போது அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததையடுத்து உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து  மரணம் அடைந்துள்ளார். அப்போது பாக்தாதியின் வாரிசுகளான அபு இப்ராஹிம் அல் அல்-ஹாஷிமி அல்-கொராஷியும் சேர்ந்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், “ஷேக் அல்-பக்தாதியைக் கொன்றதில் அமெரிக்க மகிழ்ச்சியடைய வேண்டாம் அமெரிக்கா. ஐஎஸ் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் பரவிக் கொண்டு இருக்கிறோம்” என்று ஐஎஸ் அமைப்பு ஆடியோ அறிக்கை ஒன்று  தெரிவித்துள்ளது. 

அந்த ஆடியோவில், ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் யார் என்பதற்கான எந்த குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இருந்த ஐஎஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கொல்லப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Don't be Very happy - ISIS terrorist group cautioning US

Latest Articles

KOLNews