KOLNews

இந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் இந்தோனேசியாவின் வடக்கில் 142 கிலோமீட்டர் தொலைவில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இந்தோனேஷியாவில் சிமாராங் எனும் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜெபாரா  என்றும் கடலுக்கு அடியில் 578 கிலோ மீட்டர் கீழே உணரப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம். 

English Summary

Earthquake in Indonesia ..!

Latest Articles

KOLNews