KOLNews

சூழல் சரியாக அமையாவிட்டாலும் மக்கள் மனம் தளரக்கூடாது .!’ - காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான்

சமீபத்தில்  ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தற்போது  மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த கட்சி தொண்டர்களிடையே பேசினார். 

அப்போது,  ‘காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்பது ஜிகாத் ஆகும். இதை நாங்கள் கடவுளுக்காக செய்வோம். காஷ்மீரிகளை உலக நாடுகள் ஆதரித்தாலும் அல்லது கைவிட்டாலும், நாங்கள் அவர்களுக்கு துணை நிற்போம்’ என தெரிவித்தார்.

மேலும், இது ஒரு போராட்டம் என்று கூறிய இம்ரான்கான், இந்த விவகாரத்தில் சூழல் சரியாக அமையாவிட்டாலும் மக்கள் மனம் தளரக்கூடாது எனவும், பாகிஸ்தான் மக்கள் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக இருந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானும் சீனாவும் கருத்து தெரிவித்து, அது பெரிய அளவில் எடுபடாமல் போன நிலையில், தற்போது மீண்டும் காஷ்மீர் குறித்து இம்ரான் கான் பேசிவருவது பாகிஸ்தான் ராணுவத்தை திருப்தி படுத்தவே, என  அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் 

English Summary

Even if the environment is not right, people should not be disturbed.- Imran

Latest Articles

KOLNews