KOLNews

வெடித்துச் சிதறிய விமானம்..! - உக்ரைனில் 25 ராணுவ வீரர்கள் பலி

உக்ரைனில் விமானப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம், விமானதளத்திற்கு 2 கிலோமீட்டக்கு முன் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோரமான விபத்து வடகிழக்கு உக்ரைனின் தேசிய நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், பயணித்த 25 வீரர்களும் உயிரிழந்ததாக ஆயுதப்படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராணுவ விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை அந்நாட்டின் உள்துறை இணையமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்க, அதனை அணைக்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.  இதற்கிடையே, இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English Summary

Exploded plane ..! - 25 soldiers killed in Ukraine

Latest Articles

KOLNews