KOLNews

போப் ஆண்டவருக்கு காய்ச்சல்..! - விரைந்து குணமாக உலக தலைவர்கள் வாழ்த்து

கடந்த 4 ந்தேதி, குடல் பாதிப்பு காரணமாக  இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரானரிசுக்கு அறுவை சிகிசசை நடைபெற்றது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின போப் பிரான்சிசுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 முன்னதாக பெருங்குடல் சுருக்கத்தால் அவதிப்பட்ட அவருக்கு , பெருங்குடலின் இடதுபாகம் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது . இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் வேகமாக குணமடைந்து வந்த நிலையில், அறுவை சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப்பின் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது . அதையடுத்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . 

இதக்கிடையே, போப் பிரான்சிசால சாப்பிடவும் , துணையின்றி நடக்கவும் முடிவதாகவும் வாடிகன நிர்வாகம் கூறியுள்ளது . போப் பிரான்சிஸ விரைவில் உடல் நலம் பெற்று திரும்பிட  உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English Summary

Fever for the Pope ..! - Wishes from World leaders on speedy recovery

Latest Articles

KOLNews