KOLNews

துபை மருத்துவமனையில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்..!

திங்கள்கிழமை, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப், ரத்தக்கொதிப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததையடுத்து துபையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு  முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பதவி வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அவா் முடக்கி வைத்தாா்.

அதன் பின் வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு,  முஷாரஃப்பை தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2013-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், அந்த வழக்கின் தீா்ப்பை வரும் 28-ஆம் தேதி வெளியிடுவதாக அந்த நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி அறிவித்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, பதவியிலிருந்து நீங்கிய பின், அவா், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். பிறகு உடல்நலம் குன்றியதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவ சிகிச்சைக்காக துபையில் வசித்து வருகிறார். 

அவருக்கு தற்போது உடல் நலம் குறைந்த நிலையில், அதன் காரணமாக அவா் மீதான தேசத் துரோக வழக்கின் தீா்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை லாகூா் உயா் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இருப்பினும், இந்த வழக்கில் முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும் என்று அந்நாட்டு நீதித்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

English Summary

Former Pakistani President Musharraf in Dubai hospital

Latest Articles

KOLNews