புகழ்பெற்ற பிரஞ்சு ஆடை வடிவமைப்பாளரான பியர் கார்டின், டிச 29 அன்று 98 வயதில் காலமானார்,
1960 கள் மற்றும் 70 களில் அவரது நவ நாகரீக புதுமையான பாணி வடிவமைப்புகளுக்காக ஐரோப்பாவெங்கும் கொண்டாடப்பட்டார், . அவர் இத்தாலியின் வெனிஸில் 1922 ஜூலை 7 அன்று பிறந்தார், ஆனால் மத்திய பிரான்சில் வளர்ந்து, பின் 1945 இல் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார்,
அப்போதைய பிரபல ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டியன் டியோரிடம் வேலை செய்த பியர் கார்டின், பின் நாளில் தனது சொந்த நிறுவனத்தை நிறுவி, டியேட்டருக்கு ஆடைகள் மற்றும் முகமூடிகளை வடிவமைத்து வந்தார்,
கார்டின் தனது பிராண்ட் பெயரை உலகம் முழுவதும் கொண்டு சென்றார், சிகரெட், டைஸ், மினரல் வாட்டர் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளில் அவரது பெயரை வைத்தார். அவர் கலை வடிவமைப்புகளிலும், மாக்சிமுடன் உணவகம் மற்றும் ஹோட்டல் வணிகத்திலும் தன்னை அறிமுகப்படுத்தினார்.

பிரான்சின் ஒரு தொழில்துறை நகரத்தில் வளர்ந்து வரும் போது, கார்டின் தனது 17 வயதில் ஒரு தையல்காரரிடம் பயிற்சி பெற்றார், ஏற்கனவே பெண்களுக்கான வடிவமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர். அத்துடன்,Beauty 1947 ஆம் ஆண்டில் கலைஞர், கவிஞர் மற்றும் இயக்குனர் ஜீன் கோக்டோ ஆகியோருடன் ‘பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’ திரைப்படத்திற்கான மயக்கும் செட் மற்றும் ஆடைகளில் பணியாற்றுவதன் மூலம் வடிவமைப்பாளராகவும் பங்களித்தார்.

கார்டினின் ஜப்பான், சீனா,சோவியத் யூனியன் என ஆடை வடிவமைப்பில் உலகளாவிய சாம்ராஜ்யத்தை அமைத்தார். 1991 மாஸ்கோவில் ரெட் சதுக்கத்தில் 1991 ஆம் ஆண்டில் பேஷன் ஷோ நடத்திய முதல் வடிவமைப்பாளர் என்கிற பெருமைக்கு உரியவராக பியர் கார்டின் இருந்தார், அங்கு 2,00,000 பெருக்கும் அதிகமானவரை ஈர்த்தார்.
தற்போது அவரின் மறைவால் மிகப்பெரும் ஆடை வடிவமைப்பு கலைஞனை உலகம் இழந்துள்ளது.
English Summary
French fashion designer Pierre Cardin has passed away ..!