மெக்சிகோவின் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இளைஞர்கள் இரு தரப்பினரிடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியின் இடையே இரண்டு பிரிவினர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே பெரும் சண்டையாக மாறியது.
அப்போது, போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எதிர்தரப்பினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட துவங்கினார். இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரையும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தீவீரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Friendly football match.? - 4 shot killed