KOLNews

அமெரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளான காந்தி சிலை..! - அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

அமெரிக்காவில் அண்மையில் ஜார்ஜ் புளாயிட் எனும் கருப்பர் இனத்தை சேர்ந்தவர், போலீஸ்காரர்களால் கழுத்தில் மிதிக்கப்ட்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. 

 அதில் குறிப்பாக பிளாக் லைப் மேட்டர்ஸ் அமைப்பினர் தொடர்ந்து நூறு நாட்களுக்கும் மேலாக போராடியதுடன் சில இடங்களில் வன்முறைப் போராட்டத்திலும்  ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில்  அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலை இவர்கள்  தாக்கி சாய்த்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாய்க்கப்பட்ட  இந்த சிலையை பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் நிமிர்த்தி வைத்துள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி வழியை போதித்த மகாத்மா காந்தியின் சிலையை போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் உள்ள இந்த திருடர்கள் உடைக்க முயன்றுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து ஜார்ஜ் வாஷிங்டன், ஜெபர்சன் ஆகிய தலைவர்களின் சிலையை உடைக்கவும் தயங்க மாட்டார்கள் என ஆவேசமாக  குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.

English Summary

Gandhi statue under attack in US ..! - President Trump strongly condemned

Latest Articles

KOLNews