KOLNews

810 கைதிகளுக்கு பொது மன்னிப்பு..! - இளகிய மனதுடன் ஈத் பண்டிகை அறிவிப்பு

ரபாத், ஈத் பண்டிகையை முன்னிட்டு, தன் நாட்டின் கைதிகளில்  810 பேருக்கு,  மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது பொது மன்னிப்பு வழங்கியதாக, அந்நாட்டு  நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியரின் புனித ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல் பித்ர் வியாழக்கிழமை மொராக்கோவில் கொண்டாடப்படும் நிலையில்,  இந்த அறிவிப்பு வந்துள்ளது 

அதன்படி, விடுவிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்றும் பின்னர் போராளிகளை மறுவாழ்வு செய்வதற்கான அரசாங்க அணுகுமுறையான ‘முசலாஹா’ (நல்லிணக்கம்) திட்டத்தில் பங்கேற்றனர் என்பதும் தெரிய வருகிறது. 

முண்டதாக,  தாங்கள் அனைத்து வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதாக 12 பேரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர,  2016 ஆம் ஆண்டில் அல் ஹொசைமாவின் வடக்கு பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பற்றாக்குறை தொடர்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 17 பேருக்கும் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

English Summary

General Pardon for 810 prisoners ..! - Eid festival announcement with a light heart

Latest Articles

KOLNews